முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது…

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது…

கேப்டன் படத்தின் போஸ்டர்

கேப்டன் படத்தின் போஸ்டர்

அறிவியல் மற்றும் மிருகங்களை மையப்படுத்தி படங்களை எடுப்பதில் சக்தி சவுந்தர் ராஜன் எக்ஸ்பெர்ட்டாக உள்ளார். இவர் இயக்கத்தில் வெளிவந்த மிருதன், டிக் டிக் டிக், டெடி, நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா ஹீரோவாக நடிக்கும் கேப்டன் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் புரொமோ வீடியோ ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது.

டெடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்கனர் சக்தி சவுந்தர் ராஜனும் கேப்டன் என்ற படத்தில் இணைந்துள்ளனர். ஆக்சன் த்ரில்லர் ஜேனரில் உருவாக்கப்பட்டுள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

கேப்டன் படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

பூஜையுடன் நாளை தொடங்குகிறது புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்… ரசிகர்கள் உற்சாகம்

ஆர்யாவுடன் சிம்ரன், ஐஷ்வர்ய லட்சுமி, ஹரிஷ் உத்தமன், தவுபிக் ஷெர்ஷா உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து யுவன் பாடிய நினைவுகள் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கேப்டன் படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்றோருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய நடிகை பூமிகா – பிரபலங்கள் வாழ்த்து

அறிவியல் மற்றும் மிருகங்களை மையப்படுத்தி படங்களை எடுப்பதில் சக்தி சவுந்தர் ராஜன் எக்ஸ்பெர்ட்டாக உள்ளார். இவர் இயக்கத்தில் வெளிவந்த மிருதன், டிக் டிக் டிக், டெடி, நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.

top videos

    இதனால் கேப்டன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ராணுவ அதிகாரி கேரக்டரில் ஆர்யா நடித்துள்ளார்.

    First published:

    Tags: Actor Arya