ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Arya: 'மகாமுனி' இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்க்கும் ஆர்யா!

Arya: 'மகாமுனி' இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்க்கும் ஆர்யா!

ஆர்யா - சாந்த குமார்

ஆர்யா - சாந்த குமார்

இந்தமுறை அதிகம் தாமதிக்காமல் அடுத்தப் படத்தை இயக்குவதற்காக ஸ்கிரிப்ட் வேலையில் ஏற்கனவே இறங்கிவிட்டார் சாந்தகுமார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி படத்தில் நடித்த ஆர்யா, மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக கூறியுள்ளார்.

  அருள்நிதி, இனியா நடிப்பில் வெளியான மௌனகுரு படமே சாந்தகுமாரின் முதல் படம். வித்தியாசமான கதை, கச்சிதமான மேக்கிங் என்று முதல் படத்தில் அனைவரையும் கவனிக்க வைத்தார். அந்த காலகட்டத்தில் திரைக்கதைக்காக பாராட்டப்பட்ட திரைப்படமாக மௌனகுரு இருந்தது. இந்தப் படத்தை இந்தியில் அகிரா என்ற பெயரில் ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்தார்.

  மௌனகுரு வெளியான போதே கார்த்தி அல்லது சூர்யாவை வைத்து படம் இயக்க ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா சாந்தகுமாருக்கு அட்வான்ஸ் தந்தார். ஆனால், பல வருடங்களாகியும் படம் தொடங்கப்படவில்லை. ஸ்கிரிப்ட் எழுதுவதில் அவர் காட்டிய தாமதமே இதற்கு காரணம். கடைசியில் மகாமுனி படத்தை ஆர்யாவை வைத்து இயக்கினார். படம் வணிகரீதியாக சுமாராகப் போனது. அதேநேரம் 9 சர்வதேச விருதுகள் உள்பட பல சர்வதேச கௌரவங்களை படம் பெற்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், மீண்டும் சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக ஆர்யா அறிவித்துள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் கூடும் என்கின்றன செய்திகள். இந்தமுறை அதிகம் தாமதிக்காமல் அடுத்தப் படத்தை இயக்குவதற்காக ஸ்கிரிப்ட் வேலையில் ஏற்கனவே இறங்கிவிட்டார் சாந்தகுமார்.

  ஆர்யாவைப் பொறுத்தவரை அவர் தான் இப்போது தயாரிப்பாளர்களின் டார்லிங். சார்பட்டா பரம்பரை, அரண்மணை 3, எனிமி ஆகிய படங்கள் அவரது நடிப்பில் தயாராக உள்ளன. தவிர நலன் குமாரசாமியின் சூப்பர் ஹீரோ கதையிலும், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்திலும் நடிக்கயிருக்கிறார். இதில் நலன் குமாரசாமி படத்தை மகாமுனியை தயாரித்த ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

  இவை தவிர மேலும் அரைடஜன் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Arya