Home /News /entertainment /

இன்று வெளியாகிறது யோகிபாபு நடித்துள்ள ’பன்னிகுட்டி’ படத்தின் டிரெய்லர்

இன்று வெளியாகிறது யோகிபாபு நடித்துள்ள ’பன்னிகுட்டி’ படத்தின் டிரெய்லர்

யோகிபாபு

யோகிபாபு

அனு சரண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பன்னி குட்டி. இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  • News18
  • Last Updated :
    யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பன்னிக்குட்டி படத்தின் புதிய டிரெய்லரை நடிகர் ஆர்யா இன்று வெளியிடுகிறார். 

    அனு சரண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பன்னி குட்டி. இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    கொரோனா காலகட்டத்திற்கு முன்பாகவே பன்னி குட்டி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின. இந்தப் படத்தை கதிர் நடிப்பில் வெளியாகி கவனத்தை ஈர்த்த கிருமி படத்தின் இயக்குனர் அனு சரண் இயக்கியுள்ளார்.

    இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூழல் என்ற இணையத் தொடர் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. 8 பகுதிகள் கொண்ட அந்த தொடரில் நான்கு பகுதிகளை அனு சரண் இயக்கியிருந்தார்.

    இந்தநிலையில் அடுத்த மாதம் வெளியாகும் பன்னி குட்டி திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  யோகி பாபு நடிப்பில் வெளியான தர்ம பிரபு, மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்தன.

    குறிப்பாக மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும்,  விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த வரிசையில் பன்னி குட்டி திரைப்படமும் இடம்பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

    Also read... விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல’ பாடலின் வீடியோ ரிலீஸ்… வெளியான மாஸ் அப்டேட்

    மேலும், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பன்னிக்குட்டி படத்தின் புதிய டிரெய்லரை நடிகர் ஆர்யா இன்று வெளியிடுகிறார். இந்த படம் வரும் 8ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Arya, Actor Yogibabu

    அடுத்த செய்தி