முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘கேப்டன்’ படம் எல்லோருக்கும் பிடிக்கும் – நடிகர் ஆர்யா நம்பிக்கை

‘கேப்டன்’ படம் எல்லோருக்கும் பிடிக்கும் – நடிகர் ஆர்யா நம்பிக்கை

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்யா

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்யா

கொரோனா காரணமாக மக்கள் திரையரங்கம் வருவது குறைந்துள்ளது. ரசிகர்களை திரையரங்கம் அழைத்து வரும் விதமாக மீண்டும் நாங்கள் நேரடி புரொமோஷனை துவங்கி உள்ளோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கேப்டன் படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் அமையும் என படத்தின் ஹீரோ ஆர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள சினிபிரியா திரையரங்கிற்கு படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் ஆர்யா வந்திருந்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆர்யா பேசும்போது,"இயக்குநர் சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் இந்த கேட்படன் படம் தயாராகி உள்ளது. இதற்கு முன்பாக "டெடி" படத்தில் இயக்குநருடன் நான் இணைந்து நடித்து இருக்கிறேன்.

‘எழுத்தாளர் சங்க தேர்தலில் எதிர் அணியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்’ – கே. பாக்யராஜ் குற்றச்சாட்டு…

சீஜி(CG) வைத்து படம் செய்வது இயக்குனருக்கு கைவந்த கலை. இதற்கு முன்பாக மிருதன், டிக்.டிக்.டிக், டெடி போன்ற கிராபிக்ஸ் நுட்பங்கள் கூடிய படங்களை இயக்கி இருக்கிறார். கேப்டன் படம் வருகின்ற செப்.8 ஆம் தேதி திரையரங்களில்வெளியாகிறது. நாங்கள் ரசித்து ரசித்து எடுத்த படம் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன்.

நடிகர்கள் பட விளம்பரங்களுக்கு திரையரங்கம் வருவது  முன்பே இருந்த நடைமுறை. டிஜிட்டல் ப்ரமோஷன் வீரியம் இதற்கு இணையாக இருந்ததால் நடிகர்கள் பட ப்ரமோஷனுக்கு தியேட்டர் விசிட் செய்வது குறைந்து இருந்தது.

பாகுபலி நடிகையிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை… நடந்தது என்ன?

கொரோனா காரணமாக மக்கள் திரையரங்கம் வருவது குறைந்துள்ளது. ரசிகர்களை திரையரங்கம் அழைத்து வரும் விதமாக மீண்டும் நாங்கள் இதைத் துவங்கி உள்ளோம். இந்த சுற்றுப்பயணம் நடிகர்களுக்கும் ஓர் புத்துணர்ச்சி கொடுக்கிறது.

top videos

    சென்னையை விட தென் மாவட்டங்களில் அதிக நாட்கள் தங்கி படபிடிப்பில் பங்கேற்று இருக்கிறேன். மதுரையில் பல நண்பர்கள் இருக்கின்றனமதுரையினாலே ஜாலிதான்" என்றார்.

    First published:

    Tags: Actor Arya, Kollywood