Arya: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடி செய்ததாக ஆர்யா மீது வழக்கு - விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு

ஆர்யா

ஜெர்மனியைச் சேர்ந்த பெண், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

  • Share this:
    இளம் பெண்ணை ஏமாற்றியதாக நடிகர் ஆர்யா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடித்த ‘சார்பட்டா’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆர்யா.

    கோமா நிலையில் சீரியல் நடிகர் வேணு அரவிந்த்

    இந்த ஆண்டு மார்ச் மாதம், ஜெர்மனியைச் சேர்ந்த வித்ஜா என்ற பெண், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, அன்பை காட்டி 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த குற்றச்சாட்டில், ஆர்யா தான் சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல், பின்பு சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

    காயத்தால் துடித்த நடிகர் கார்த்திக்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வித்ஜாவின் வழக்கறிஞரான சென்னையைச் சேர்ந்த ராஜபாண்டியன் இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவில், வித்ஜாவை திருமணம் செய்து கொள்வதாக ஆர்யா உறுதியளித்ததாகவும், மேற்கூறிய தொகையை அவரிடமிருந்து வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாயிஷாவுடனான திருமணம் குறித்து ஆர்யாவிடம் வித்ஜா கேள்வி எழுப்பியபோது, சாயிஷாவின் பெற்றோர் தனது கடன்கள் அனைத்தையும் செலுத்துவதாக உறுதியளித்ததால் மட்டுமே அவர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக கூறியதாகவும், ஆறு மாதங்களுக்குள் சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் மட்டுமே, தான் அந்த திருமணத்துக்கு சம்மதித்ததாக வித்ஜாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: