முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ப்ரிடேட்டர் அர்னால்ட் லுக்கில் தெறிக்கவிடும் ஆர்யா!

ப்ரிடேட்டர் அர்னால்ட் லுக்கில் தெறிக்கவிடும் ஆர்யா!

ஆர்யா

ஆர்யா

பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருக்கும் ஏலியன் உருவம், இது ப்ரிடேட்டர் போன்ற கதை என்பதை உறுதி செய்கிறது.

  • Last Updated :

ஆர்யாவின் கேப்டன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் ப்ரிடேட்டர் படத்தில் வரும் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் போன்ற தோற்றத்தில் அட்டகாசமாக இருக்கிறார் ஆர்யா.

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்யும் சக்தி சௌந்தர்ராஜனின் புதிய படம்தான் இந்த கேப்டன். நாய்கள் ஜாக்கிரதையில் நாயை பிரதானப்படுத்தி எடுத்தார். மிருதன் படத்தில் ஸாம்பிகளை வைத்து கதை அமைத்திருந்தார். தமிழின் முதல் ஸாம்பி திரைப்படமாக அது அமைந்தது. டிக் டிக் டிக் படத்தில் விண்வெளியை மையப்படுத்தி கதை எழுதியிருந்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

தற்போது ஆர்யா நடிப்பில் கேப்டன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். கேப்டன் என்றதும் ராணுவத்தைப் பற்றிய படமாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆர்யா ராணுவ கேப்டன்தான். ஆனால் பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருக்கும் ஏலியன் உருவம், இது ப்ரிடேட்டர் போன்ற கதை என்பதை உறுதி செய்கிறது. இந்த ஏலியனை வேட்டையாடுகிற கேப்டனாக ஆர்யா படத்தில் நடித்திருக்கக்கூடும் என்கிறார்கள். ப்ரிடேட்டர் படத்தில் ஏலியனை வேட்டையாடும் அர்னால்ட் போலவே இதில் ஆர்யாவின் லுக்கும் உள்ளது.

4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!

கேப்டனில் ஆர்யாவுடன் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை சக்தி சௌந்தர்ராஜன் செய்து வருகிறார். விரைவில் ட்ரெய்லரை வெளியிட உள்ளனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Arya