நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது - விஷால் ட்வீட்

ஆர்யா - சாயிஷா

ஆர்யா - சாயிஷா ஜோடி கடந்த 2019 ஆண்டு, மார்ச் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

 • Share this:
  நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  ஆர்யா - சாயிஷா ஜோடி கடந்த 2019 ஆண்டு, மார்ச் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் சாயிஷா காப்பான் மற்றும் டெடி திரைபடத்தில் நடித்திருந்தார்.

  இந்நிலையில் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், இந்த செய்தியை சொல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மாமாவாகி உள்ளேன். எனது சகோதரர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிக்கு ஆளாகி உள்ளேன். ஆர்யா அப்பாவாக புதிய பொறுப்பை எடுத்துள்ளார் என்றுள்ளார்.  சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாக உள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் ஆர்யா இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாக அவரை புகழ்ந்து வருகின்றனர் பாராட்டு மழையில் நனைந்து வந்த ஆர்யாவுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: