வெங்கட் பிரபு - நாக சைத்தன்யா படத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு, நாக சைதன்யாவை வைத்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை கடந்த மாதம் தொடங்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. போலீஸ் த்ரில்லர் என்று கூறப்படும் இந்தப் படம் 'NC22' மற்றும் 'VP11' என்றழைக்கப்படுகிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து மாமனிதன் படத்திற்குப் பிறகு 'என்சி22' படத்திற்கு இசையமைக்கவுள்ளனர். சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபுவின் கடைசியாக வெளியான 'மாநாடு' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததால் அவரின் அடுத்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
விண்வெளியில் உருவாகும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் படம்!
The Idol of Many 🔥
We are Highly Elated to Welcome On board the Sensational Performer @thearvindswami for our #NC22 💫🔥@chay_akkineni @vp_offl @IamKrithiShetty @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @SS_Screens @srkathiir @rajeevan69 @abburiravi #VP11 pic.twitter.com/UKwxxlh3sI
— Srinivasaa Silver Screen (@SS_Screens) October 14, 2022
இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். 'NC22' படத்தில் வில்லனாக ஜீவா நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு நடிகை பிரியாமணியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் NC22 படத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Arvind Swami, Venkat Prabhu