அரவிந்த் சாமியா இது...? நியூ லுக் பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்

அரவிந்த் சாமியா இது...? நியூ லுக் பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்
நடிகர் அரவிந்த் சாமியின் நியூ லுக்
  • News18
  • Last Updated: January 17, 2020, 9:46 AM IST
  • Share this:
ட்விட்டரில் நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்ட புதிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

திரையுலகில் 30 வருடங்களாக நடித்து வருகிறார் அரவிந்த் சாமி.  தனி ஒருவன் படத்திற்கு  பிறகு ஸ்டைலிஸ் வில்லன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் நடிகர் அரவிந்த் சாமி. 2015-ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் வில்லனாக இவர் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. அந்த படத்திற்கு பிறகு வில்லனும் ஸ்டைலாக இருக்கலாம் என்ற லாஜிக் திரையுலகில் வலம் வர ஆரம்பித்தது.

இந்நிலையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.


Also see... புதுப்பேட்டை முதல் பட்டாஸ் வரை... புன்னகை அரசி சினேகாவின் கியூட் ஸ்டில்ஸ்!

இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அதில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம் ஜெயலலிதாவின் தோற்றத்தோடு ஒத்திருக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.



இந்நிலையில் ட்விட்டரில் நியூ லுக் புகைப்படங்களை அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்த எனது புதிய லுக் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமியா இது என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.

Also see...
First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading