ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று

அருண் விஜய்

அருண் விஜய்

நடிகர் அருண் விஜய், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெல்டா வேரியண்ட் மற்றும் ஒமிக்ரான் வேரியண்ட் என இரு வேரியண்டுகளும் ஒரே நேரத்தில் வேகமாக பரவி வருவதால், இதிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசும் மாநில அரசுகளும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

  கடந்த 2020 தொடக்கத்தில் இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக அகலாத நிலையில், தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் அடங்குவர்.

  Also Read - அமேசான் ப்ரைமில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்!

  இந்நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ”அனைவருக்கும் வணக்கம்!! நான் கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டுள்ளதை உங்களுக்குத் தெரிவிக்கவே இந்த செய்தி. நான் தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன். எனது மருத்துவரின் ஆலோசனையின்படி அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Arun Vijay, Tamil Cinema