Home /News /entertainment /

எமோஷனல் கலந்த ஆக்‌ஷன் படங்களில் நடிக்க இதுதான் காரணம் - அருண் விஜய் பேட்டி!

எமோஷனல் கலந்த ஆக்‌ஷன் படங்களில் நடிக்க இதுதான் காரணம் - அருண் விஜய் பேட்டி!

அருண் விஜய்

அருண் விஜய்

கோவை கே.ஜி.திரையரங்கில்  நடிகர் அருண் விஜய் சினம் படம் புரோமஷனுக்காக திரையங்கிற்க்கு வந்து ரசிகர்களுடன் சினம் படம் டீசரைக் பார்த்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Coimbatore
எமோஷனல்  கலந்த ஆக்‌ஷ்னுக்கு  மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால் அது போன்ற கதைகளைக் தேர்ந்தெடுத்து நடிப்பதாக  நடிகர் அருண் விஜய் கோவையில் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

கோவை கே.ஜி.திரையரங்கில்  நடிகர் அருண் விஜய் சினம் படம் புரோமஷனுக்காக திரையங்கிற்க்கு வந்து ரசிகர்களுடன் சினம் படம் டீசரைக் பார்த்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அருண் விஜய், வாழ்க்கையில் எல்லோருக்கும் வரும் கோபத்தைக்  வெளிபடுத்துவது போன்ற  படம் தான் இது எனவும் பல இடங்களில் கொரோனா தொற்றால் அனுமதி கிடைக்காமல், மிகவும் சிரமப்பட்டு அனுமதி வாங்கி  கஷ்டப்பட்டுதான் இந்த படத்தைக் எடுத்தோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் என்னை அறிந்தால் படத்தின் "விக்டர்" போன்ற கதாபாத்திரம் உள்ள கதைகள் ஏதும் வரவில்லை எனவும், அது போன்ற காதபாத்திரம்  வந்தால் நடிப்பேன் எனவும் தெரிவித்தார்.

Also read... Natchathiram Nagargirathu Twitter review: எப்படி இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது படம்? - ட்விட்டர் விமர்சனம்!

மீண்டும் கெளதம் வாசுதேவ் மேனன் அதுபோன்ற படத்தைக் எடுத்தால் மீண்டும் நடிக்க தயார் எனத்தெரிவித்த அருண் விஜய், எமோஷனல்  கலந்த ஆக்‌ஷ்னுக்கு  மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால் அது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Arun Vijay

அடுத்த செய்தி