சண்டைக் காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் அருண் விஜய்க்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அருண் விஜய் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார். ஃபிட்னஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் அருண் விஜய்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சினம், தடம், யானை உள்ளிட்ட படங்கள் அதிகம் ரசிக்கப்பட்டன. குறிப்பாக அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் இவர் வில்லனாக விக்டர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நவீன் இயக்கியுள்ள இந்த படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து விஜய் ஆன்டனி நடித்திருக்கிறார். இந்தப் படமும் ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து ‘அச்சம் என்பதில்லையே’ என்ற படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். தலைவா, மதராச பட்டினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக் காட்சி ஷூட்டிங்கின்போது அருண் விஜய்க்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருண் விஜய் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியுடன் அவர் நலம்பெற வேண்டி கமென்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
ஃபோட்டோக்களை பதிவிட்ட அருண் விஜய், ‘திரையில் எனது சண்டைக் காட்சிகளை பார்ப்பீர்கள். அதற்கு பின்னணியில் இதுபோன்ற ஏராளமான காயங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும், சண்டைக் காட்சிகளில் நான் விருப்பத்துடன் நடிக்கிறேன். அடுத்த படம் வெளிவருவதற்காக காத்திருக்கிறேன். லவ் யூ ஆல்’ என்று கூறியுள்ளார்.
WATCH – வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து 2-ஆவது பாடல்
அருண் விஜய் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Arun Vijay