நடிகர் அருண் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கி கவுரவிக்கப்பட்டுளளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அருண் விஜய், கோல்டன் விசா அளித்து கவுரவப்படுத்திய துபாய் அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார். கோல்டன் விசாவை பயன்படுத்தி, வெளிநாட்டவர் நீண்டகாலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழவும், தொழில் செய்து கொள்ளவும் முடியும். இதற்கு மற்ற எந்த ஒரு நாட்டின் பங்களிப்பு அவசியம் இருக்காது.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கோலிவுட் நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விக்ரம், நடிகை அமலாபால், திரிஷா, ராய்லட்சுமி உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு கவுரவித்தது.
Thanks to the UAE government for this honor!! 🙏🏽❤️@UAEmediaoffice @gdrfadubai @nayeemmoosa #goldenvisa#goldenvisadubai pic.twitter.com/OhjG4nhHBv
— ArunVijay (@arunvijayno1) February 3, 2023
இந்த நிலையில் அருண் விஜய்க்கு கடந்த மாதம் கோல்டன் விசா அளிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை,சினம் ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. அடுத்ததாக பார்டர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு அருண்விஜய் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெற்று இணைய தொடரில் நடித்திருந்தார். இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Arun Vijay