முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் தள்ளிப்போகும் அருண் விஜயின் 'பார்டர்' திரைப்படத்தின் ரிலீஸ்!

மீண்டும் தள்ளிப்போகும் அருண் விஜயின் 'பார்டர்' திரைப்படத்தின் ரிலீஸ்!

அருண் விஜய்

அருண் விஜய்

அருண் விஜய் நடித்துள்ள 'பார்டர்' திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்ததன்  மூலம்  நடிகர் அருண் விஜய்  மார்க்கெட் எகிறியது. அதன் பின்பு மோஸ்ட் வான்டட் நடிகராக அருண் விஜய் வலம் வந்தார். குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்றது. சமீபத்தில்  ஹரி இயக்கத்தில்  யானை திரைப்படம் வெளியானது.இதில் ப்ரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் படமாக யானை படம் அமைந்தது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் அருண் விஜய் நடிப்பில் பார்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் இருந்தது.

இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அருண் விஜய் - அறிவழகன் மூன்றவாது முறையாக கைகோர்த்துள்ள இத்தப் படம், ஆக்ஷன், த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது. படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டும், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக வெளியாகவில்லை.

மேலும், இந்த மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக கூறியிருந்தது. ஆனால், தற்போதும் வெளியாகவில்லை. எனவே, பார்டர் படத்தை வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Also read... ராங்கி முதல் செம்பி வரை பெண் கதாப்பாத்திரங்களை முன்னிலைப்படுத்தி இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேதியிலாவது படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Arun Vijay