இதைச் செய்தால் தமிழக அரசுக்கு புண்ணியமாக இருக்கும்..! - நடிகர் அருள்தாஸ்

மூன்று வேலையும் அம்மா உணவகம் மூலமாக இலவசஉணவு கொடுத்து உதவினால் பேருதவியாகவும் தமிழகஅரசுக்கு பெரும் புண்ணியமாகவும் இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் அருள்தாஸ்.

இதைச் செய்தால் தமிழக அரசுக்கு புண்ணியமாக இருக்கும்..! - நடிகர் அருள்தாஸ்
நடிகர் அருள்தாஸ்
  • Share this:
ஊரடங்கு காரணமாக, வேலையின்மை காரணமாக ஊதியமின்றி உணவுக்கு அவதிப்படும் மக்களுக்காக தமிழக அரசு மூன்று வேளையும் அம்மா உணவகம் மூலமாக இலவச உணவளிக்க வேண்டும் என்று காலா, தங்கமீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான தனிமைப்பட்டிருப்பதையும், வெளியில் நடமாடாமல் இருப்பதையும், கைகளைக் கழுவுவதையும் திரைப் பிரபலங்கள் அறிவுறுத்தி வருகின்றனர். லாக் டவுன் காரணமாக பணமின்றி, வேலையின்மை காரணமாக உணவுக்கு அவதிப்படும் மக்களுக்காக தமிழக அரசு மூன்று வேளையும் அம்மா உணவகம் மூலமாக உணவளிக்க வேண்டும் என்று நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழக அரசுக்கு வைத்திருக்கும் கோரிக்கையில், “இன்று காலையில் கடைகளுக்கு போய் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு திரும்பும் வழியில் செக்யூரிட்டி டிரஸ் போட்ட ஒருவர் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி சார்... ஒரு பத்து ரூபாய் இருக்குமா என்று கேட்டுவிட்டு பணம் கேட்க ரொம்ப கூச்சமா இருக்கு சார்... அதை கொடுத்தால் அம்மா உணவகத்தில் சாப்பிடுவேன் என்று சொன்னதும் என் இதயம் நொறுங்கி விட்டது... அவரிடம் வேறு எதையும் கேட்க மனமில்லாமல் வைத்திருந்த சிறிய மீதிபணம் முழுவதையும் அவரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்...


இவரைப்போல வெளியூர்களிருந்து வந்து சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரண பணிபுரியும் பலரின் நிலை இதுதான்...(இதில் பெரும்பாலோனோர் விவசாயிகள் என்பது தான் வேதனைக்குரியது)
இவர்களைப்போன்ற ஏழைஎளியோர், முதியவர்கள் உடல் ஊனமுற்றோர் போன்ற சாமானிய மக்களுக்கு இந்த 21 நாள் முடியும் வரையாவது மூன்று வேலையும் அம்மா உணவகம் மூலமாக இலவசஉணவு கொடுத்து உதவினால் அவர்களுக்கு பேருதவியாகவும் தமிழகஅரசுக்கு பெரும் புண்ணியமாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.news18.com/news/international/astronauts-gives-tips-on-self-isolation-mg-272493.html
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading