வாரிசு, துணிவு பஞ்சாயத்துகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது தளபதி 67, ஏகே 62 பற்றிய செய்திகள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. ஏகே 62 இயக்குநர் சர்ச்சை ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தளபதி 67 படக்குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்து காஷ்மீருக்கு படப்பிடிப்பிற்கு கிளம்பியிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு விஜய் - திரிஷா இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படதுக்கு தினேஷ் நடன இயக்குநராக பணியாற்றுகிறார். சோனி மியூசிக் நிறுவனம் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
மேலும் நண்பன், பீஸ்ட் படங்களுக்கு பிறகு நடிகர் விஜய் - ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்திலிருந்து 3 ஆம் தேதி டீசர் வீடியோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy and proud to share everyone that my daughter IYAL is a part of #thalapathy67 need all your love and blessings.. @ilan_iyal #iyalarjunan #ilaniyal pic.twitter.com/3inHcuCxoe
— Arjunan Actor (@arjunannk) February 1, 2023
இந்த நிலையில் தளபதி 67 பட பூஜை வீடியோ தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. அதில் நடிகர் விஜய் - திரிஷா சிரித்தும் பேசும் படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இந்த நிலையில் 'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களில் நடித்துள்ள அர்ஜுனன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'தளபதி 67' பூஜை படங்களைப் பகிர்ந்து, ''என் மகள் இயல் தளபதி 67 படத்தில் நடிப்பதை அறிவிப்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உங்களது அன்பும், ஆசிர்வாதமும் தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.