முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி

அர்ஜுன்

அர்ஜுன்

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் நடிகர் அர்ஜுன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

தமிழில் பல ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர் அர்ஜுன். அதோடு அவருக்கு ஆக்‌ஷன் கிங் எனும் பட்டமும் உள்ளது. இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் அதன் பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்தில் நடித்தார். காதல், காமெடி, ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அர்ஜுன் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

அதோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த 'சர்வைவர்' நிகழ்ச்சியின் மூலம் டிவி தொகுப்பாளராகவும் அறிமுகமானார் அர்ஜுன். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உமாபதி தம்பி ராமையா, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர். நேற்றுடன் முடிந்த இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகை விஜயலட்சுமி அறிவிக்கப்பட்டார்.

arjun sarja, actor arjun, actor arjun coronavirus, arjun covid 19, arjun sarja coronavirus, நடிகர் அர்ஜுன், அர்ஜுன் கொரோனா வைரஸ், அர்ஜுன் கொரோனா தொற்று, அர்ஜுன் படங்கள்

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் அர்ஜுன். அதில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் அணிய மறந்து விட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Arjun