முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அவரை வைத்து படம் இயக்கனும்... விருப்பத்தை வெளிப்படுத்திய அர்ஜுன்!

அவரை வைத்து படம் இயக்கனும்... விருப்பத்தை வெளிப்படுத்திய அர்ஜுன்!

அர்ஜுன்

அர்ஜுன்

அர்ஜுன் இப்போது லோகேஷ் கனகராஜின் 'லியோ' படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் மோகன்லாலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் அர்ஜுன்.

90-களில் தமிழ் சினிமாவில் வலம் வந்த முன்னணி நடிகர்களில் அர்ஜுன் முக்கியமான ஒருவர். சினிமாவில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ள அவர், ஹீரோ - வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதோடு ‘ஜெய் ஹிந்த்’, ‘சுயம்வரம்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் கலந்துக் கொண்ட ஒரு ஊடக உரையாடலில், நடிகர் மோகன்லாலை இயக்க விரும்புவதாகவும், அவருக்காக ஒரு கதையை தயார் செய்துள்ளதாகவுக் குறிப்பிட்டுள்ளார் அர்ஜுன். அதோடு அவர் நடிகர் மோகன்லாலை அணுகி அவரிடம் கதை சொன்னதாகவும் கூறப்படுகிறது. மோகன்லாலை இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால விருப்பம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார் அர்ஜுன்.

வேலையைப் பொறுத்தவரை, அர்ஜுன் இப்போது லோகேஷ் கனகராஜின் 'லியோ' படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் விரைவில் படக்குழுவினருடன் இணைந்து படப்பிடிப்பை தங்கள் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Arjun