ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் அர்ஜுனுக்கு எதிரான பாலியல் சீண்டல் புகாரில் அதிரடி திருப்பம்

நடிகர் அர்ஜுனுக்கு எதிரான பாலியல் சீண்டல் புகாரில் அதிரடி திருப்பம்

அர்ஜுன்

அர்ஜுன்

நடிகர் அர்ஜுனுக்கு எதிராக சொல்லப்பட்ட பாலியல் சீண்டல் புகாரில் அதிரடியான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மீடூ சர்ச்சைகள் உச்சத்தில் இருந்த போது, மூன்று வருடங்களுக்கு முன் நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் சீண்டல் புகார் அளித்தார். சிலரைப் போல் வாய் வழி ஸ்டேட்மெண்டாக கடந்துவிடாமல் பெங்களூருவில் உள்ள காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். நிபுணன் படத்தில் அர்ஜுனுடன் நடித்த போது அவர் தன்னிடம் அத்துமீறியதாக அந்தப் புகாரில் அவர் கூறியிருந்தார்.

கடந்த மூன்று வருடங்களாக இந்த வழக்கை விசாரித்த போலீசார் இறுதியில், அர்ஜுன் மீது எந்த தவறுமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சுருதி ஹரிகரன் பொய்யாக இந்தப் புகாரை அளித்துள்ளார் என அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் சுருதி ஹரிகரனை விசாரணை செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பொய்யான புகார் கொடுத்ததற்கு வழக்கு தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்!

மீடூ புகார்கள் ட்ரெண்டான போது எவ்வித ஆதாரமும் இல்லாமல் பிரபலங்கள் மீது சிலர் சேற்றைவாரி இறைத்தனர். இதனால் நிஜமாகவே பாதிக்கப்பட்ட பெண்களையும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலை உருவானது. தொடர்ந்து சமூகத்தில் பாதிக்கப்பட்டுவரும் பெண்களுக்கு மீடூ மீள்வதற்கான ஒரு வழி. அதனை தவறாக பயன்படுத்துகிறவர்கள் அந்த ஒரே வழியையும் இல்லாமல் செய்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை தேவையானதே.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Actor Arjun