முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் அர்ஜூனின் தீயவர் குலைகள் நடுங்க படத்தின் 2-வது லுக் போஸ்டர் ரிலீஸ்

நடிகர் அர்ஜூனின் தீயவர் குலைகள் நடுங்க படத்தின் 2-வது லுக் போஸ்டர் ரிலீஸ்

தீயவர் குலைகள் நடுங்க

தீயவர் குலைகள் நடுங்க

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் கதாபாத்திரத்தை தற்போது பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் அர்ஜுன் தற்போது தீயவர் குலைகள் நடுங்க என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் இடம்பெறும் அர்ஜுனின் கதாபாத்திரத்தை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் என்பவர் தீயவர் குலைகள் நடுங்க என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் அந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த திரைப்படத்தின் இடம்பெறும் அர்ஜுன் கதாபாத்திரம் என்ன என்பது குறித்தும் அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அர்ஜுனனின் பிறந்தநாள் என்பதால் அவரின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளனர்.

அதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றுள்ளன. நடிகர் அர்ஜுன் சில குறிப்பிட்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Also read... முதல் மரியாதைக்குரிய எழுத்தாளர் ஆர்.செல்வராஜ்

அந்த வகையில் தீயவர் குலைகள் நடுங்க திரைப்படமும் ஒன்று.  இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் அவர் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Arjun, Actress Aishwarya Rajesh, Entertainment