Home /News /entertainment /

இந்தியில் நடிக்கத் தூண்டிய சூர்யா - ஒத்துக் கொண்ட அர்ஜுன் தாஸ்?

இந்தியில் நடிக்கத் தூண்டிய சூர்யா - ஒத்துக் கொண்ட அர்ஜுன் தாஸ்?

சூர்யா - அர்ஜுன் தாஸ்

சூர்யா - அர்ஜுன் தாஸ்

இந்தி ரீமேக்கில் அர்ஜுன் தாஸை முக்கிய வேடத்தில் நடிக்க தூண்டியது நடிகர் சூர்யா தான் என்றும், அவரின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிலும் அர்ஜுனுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

    நடிகர் அர்ஜுன் தாஸ் இந்தி சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    அர்ஜுன் தாஸ் தனது தனித்துவமான குரலின் மூலம் ரசிகர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்துள்ளார். அதோடு கார்த்தி நடித்த 'கைதி' படத்தில் அர்ஜுனின் கதாபாத்திரம் அவருக்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது.

    தற்போது, அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 2017-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரிஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து தற்போது அந்தப் படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. 'அங்கமாலி டைரீஸ்' படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் அறிமுகமாவதாக தெரிகிறது.

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

    ஆனால் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் தாஸை முக்கிய வேடத்தில் நடிக்க தூண்டியது நடிகர் சூர்யா தான் என்றும், அவரின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிலும் அர்ஜுனுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இந்த ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் இறுதி செய்து வருகின்றனர். இதற்கிடையே கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்த சமீபத்திய பிளாக்பஸ்டர் படமான 'விக்ரம்' படத்தில் சூர்யாவும் அர்ஜுன் தாஸும் திரையைப் பகிர்ந்துக் கொண்டனர்.

    கணவர் வித்யாசாகருக்கு பிரியா விடை அளித்த நடிகை மீனா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர, அர்ஜுன் தாஸ் தற்போது வசந்த பாலனின் 'அநீதி' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி