'கைதி' படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற அர்ஜுன் தாஸ், தனது பெற்றோரை நடிகர் சூர்யா சந்தித்தது குறித்து உணர்வுப்பூர்வமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாமல் தனது நற்பணிகள் மற்றும் பாஸிட்டிவிட்டிக்கு பெயர் பெற்ற நடிகர் சூர்யா சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் பெற்றோரை சந்தித்துள்ளார். இதைத் தொடர்ந்து அர்ஜுன் தனது ட்விட்டரில் பக்கத்தில் இதயப்பூர்வமான பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
”சூர்யா சார், உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என்னை போலவே என் பெற்றோர்களும் உங்களின் தீவிர
ரசிகர்கள். உங்களை சந்தித்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் என்னை பற்றி தெரியும் எனவும், நான் நன்றாக இருக்க வேண்டும் என நீங்கள் வாழ்த்தியதும் என் பெற்றோர்களை பெருமையாக உணர வைத்துள்ளது. எனது பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி சார்" எனும் பதிவு தான் அது.
ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி
அர்ஜுன் தாஸ் 2012-ல்
திரையுலகில் அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் விஜய்யின் மாஸ்டரிலும் வில்லனாக நடித்திருந்தார். தற்போது ‘புத்தம் புது காலை விடியாதா…’ தொடரில் ‘லோனர்ஸ்’ என்ற தலைப்பில் நடித்து முடித்திருக்கிறார். ஜனவரி 14-ஆம் தேதி OTT-ல் இது வெளியாவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.