Anil Murali | பிரபல நடிகர் அனில் முரளி காலமானார்

மலையாள நடிகர் அனில் முரளி காலமானார். அவருக்கு வயது 56.

Anil Murali | பிரபல நடிகர் அனில் முரளி காலமானார்
அணில் முரளி
  • Share this:
1993-ம் ஆண்டு வெளியான ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அனில் முரளி. நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் ஒரு சில தெலுங்கு மொழிப் படங்கள் என 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சுமா என்ற மனைவியும், ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் உள்ளனர்.





படிக்க: தமிழகத்தில் ஆகஸ்ட் வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் என்னென்ன..?


படிக்க: 7 மணிநேரமாக இளைஞர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் தங்கியிருந்த பாம்பு.. (வீடியோ)படிக்க: மதுரை: மதுப்பிரியர்களை வரவழைக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய யுக்தியை கடைபிடிக்கும் டாஸ்மாக்..








சிறுநீரகக் கோளாறு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அனில் முரளியின் மரணம் திரையுலகினரிடையேயும், அவரது குடும்பத்தாரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



அன்லி முரளி மறைவுக்கு நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading