நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் மரணம்

ஜி.ராமசந்திரன்

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்று அழைக்கப்படும் ஜி.ராமசந்திரன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

 • Share this:
  நடிகர் ஜி.ராமசந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த ஜி.ஆர். களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

  மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை, மற்றும் கன்னட சில படங்களையும் தயாரித்தவர் ஜி.ராமச்சந்திரன்.

  ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ், ஜி.ஆர் என்று அழைக்கப்படும் இவர், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு சிவகுமார், சாமி குமார் என்கிற இரு மகன்கள் உள்ளனர்.

  சமீபத்தில்தான் அவரது மனைவி, தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: