Home /News /entertainment /

இரவின் நிழல் படத்தின் அடுத்த பாடலை இன்று வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்

இரவின் நிழல் படத்தின் அடுத்த பாடலை இன்று வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    இரவின் நிழல் படத்தின் அடுத்த பாடலை இன்று மாலை  உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார் என்று பார்த்தின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுப்பதில் முன்னணியில் இருப்பவர் பார்த்திபன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    பல்வேறு விருதுகளை குவித்த ஒத்த செருப்பு திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில் தனது அடுத்த வித்தியாசமான முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் எடுத்துள்ளார்.

    சுமார் 100 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இரவின் நிழல் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து, அடுத்த பாடலின் லிரிக்கல் வீடியோவை இன்று மாலை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவார் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.



    அந்த பதிவில் 16ம் தேதி மாலை ”கண்ணெதிரே” லிரிக்கல் வீடியோவை சட்டமன்ற உறுப்பினரும் எனது நண்பருமான திரு.உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவார். இப்படிக்கு திரைப்பட முன்னேற்ற கழக தொண்டன் பார்த்தின் என்று தெரிவித்துள்ளார்.

    Also read... Paid Premiere காட்சியை அறிமுகப்படுத்தினால் திரையரங்குகளில் அதிக கட்டணத்தை முறைப்படுத்தலாம்

    இதில் திரைப்பட முன்னேற்ற கழக என்ற வார்த்தையில் முதல் வார்த்தையை ஹைலெட்டாக வைத்து திமுக என்று குறிப்பிட்டு தனது பதிவை வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Parthiban, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி