ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'பெண் பெயருக்குள் ஆண் பெயர் - கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு' - புதிய படம் குறித்து பார்த்திபன் அறிவிப்பு

'பெண் பெயருக்குள் ஆண் பெயர் - கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு' - புதிய படம் குறித்து பார்த்திபன் அறிவிப்பு

பார்த்திபன்

பார்த்திபன்

தனது அகிரா புரொடக்சன்ஸ் சாரபாக 3 படங்களை தயாரிக்கவிருக்கிறார். 52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு படம் குறித்து சமீபத்தில் அறிவித்த பார்த்திபன், மற்ற இரு படங்களின் அறிவிப்பு இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்துவருகிறார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். இவரது உலகின் முதல் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்தது. மேலும் தனது ஒத்த செருப்பு படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்துள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் சுழல் என்ற வெப் சீரிஸில் நடித்து பார்த்திபன் கவனம் ஈர்த்தார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டையராக கலக்கினார். இந்தப் படம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த ஆண்டில் தனது அகிரா புரொடக்சன்ஸ் சார்பாக 3 படங்களை தயாரிக்க விருக்கிறார். '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' படம் குறித்து சமீபத்தில் அறிவித்த பார்த்திபன், மற்ற இரு படங்களின் அறிவிப்பு இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இதில் தனது படத்தின் பெயரை யூகிக்குமாறு ரசிகர்களுக்கு புதிர் போட்டுள்ளார். அவரது பதிவில், இவ்வாண்டில் இன்னொரு படம் துவங்குகிறேன். அத்தலைப்பு ஒரு பெண்ணின் பெயர் கொண்டதாய் இருக்கும். ஆனால் அதனுள் ஒரு ஆண் பெயர் இருக்கும். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு doll பரிசு. அனேகமாக அதிகாமனவர்கள் கண்டுபிடிப்பீர்கள் எனவே ஒரு டால் மட்டும் பரிசு எனக் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Parthiban