சூர்யாவுக்கு வில்லனாகும் பா.ஜ.க முன்னாள் எம்.பி!

அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

news18
Updated: July 20, 2019, 7:03 PM IST
சூர்யாவுக்கு வில்லனாகும் பா.ஜ.க முன்னாள் எம்.பி!
பரேஷ் ராவல் | நடிகர் சூர்யா
news18
Updated: July 20, 2019, 7:03 PM IST
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க முன்னாள் பா.ஜ.க எம்.பி ஒருவர் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்.ஜி.கே, காப்பான் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. சென்னை, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.


இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டிப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று படத்தில் நடிக்க முன்னாள் பாஜக எம்.பியும் நடிகருமான பரேஷ் ராவல் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Loading...

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்த பரேஷ் ராவல் சூரரைப் போற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் கமல்

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...