விஜய்யின் தனி இடம்... அஜித்தின் பண்பு - வெளிப்படையாகப் பேசிய ஆனந்த்ராஜ்!

விஜய்யின் தனி இடம்... அஜித்தின் பண்பு - வெளிப்படையாகப் பேசிய ஆனந்த்ராஜ்!
நடிகர் ஆனந்த்ராஜ்
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:23 PM IST
  • Share this:
விஜயின் இடத்தை யாராலும் தட்டிப் பறக்க முடியாது என்று நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார்.

மெர்சல், தெறி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி தளபதி 63 படத்தின் முலம் இணைந்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.


தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படம் குறித்து தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், “என் தம்பியின் படம் தான். விஜய்க்குரிய இடத்தை நிச்சயமாக யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. அவருக்கென்று தனி பக்கங்கள் உள்ளன. அவருடைய அன்பு, பண்பு, செயல்பாடு, மக்களிடம் பழகும்விதம் ஆகியவை அவரை இன்னும் உயரத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தும். அதைவைத்து அவர் நிறைய முடிவுகளை எடுக்கலாம். அது அவருடைய சொந்த விருப்பம். இப்போது விஜய் தம்பியுடன் நடித்திருக்கிறேன். இன்னும் 4 வருடங்கள் இருந்தால் விஜயின் மகனுடன் நடித்துவிடுவேன்” என்றார்.தொடர்ந்து அஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆனந்த்ராஜ், எனது சிறந்த நண்பர் அஜித். நாங்கள் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் பார்க்கும் போது மிகவும் அன்பாக பேசக்கூடியவர். மிகச் சிறந்த பண்பாளர். வெளிப்படையாக பேசக்கூடியவர். அவருக்கு கடவுள் பக்தி அதிகம். அஜித்தின் உயரம் அவரது பண்புதான். என்னை விட மூத்த நடிகரைப் பார்த்த போது அவரது காலில் விழுந்து கும்பிட்டார் அஜித். அந்தப் பண்புதான் அவரிடத்தில் என்னைக் கவர்ந்தது” என்று கூறியுள்ளார்.விஜய் தயாரிக்கும் முதல் படம்... ஹீரோயினாகும் வாணி போஜன்...!வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading