நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்பேன் - ’தளபதி 63’ பட நடிகர் அதிரடி

நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்பேன் - ’தளபதி 63’ பட நடிகர் அதிரடி
விஜய் உடன் ஆனந்த்ராஜ்
  • News18
  • Last Updated: April 14, 2019, 2:01 PM IST
  • Share this:
நான் நோட்டாவின் வேட்பாளர், எனக்கு தமிழக மக்கள் பெருவாரியான ஆதரவு தரவேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார்.

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 16-ம் தேதியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள் பலரும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த முறை அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் ஆனந்த்ராஜ், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகினார். பின்னர் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை விமர்சிக்கவும் தவறவில்லை.


இந்நிலையில் தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜே.கே.ரித்திஷ் மரணம் என்னை மிகவும் பாதித்தது. ஸ்டெர்லைட், மீத்தேன், நீட் என எந்த தமிழக பிரச்னைகள் குறித்தும் தேசிய கட்சிகளிடம் தமிழக கட்சிகள் எந்தவித உறுதியையும் பெறவில்லை.

நோட்டாவிற்கு வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் செல்ல உள்ளேன். நோட்டாவிற்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றாலும் ஏன் அதற்கு இவ்வளவு வாக்குகள் வந்தது என்று தேர்தல் ஆணையம் திரும்பிப் பார்க்க வேண்டும். நமது கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.

நான் நோட்டாவின் வேட்பாளர் எனக்கு தமிழக மக்கள் பெருவாரியான ஆதரவு தரவேண்டும் வேண்டுகிறேன். சரத்குமார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் சாதி அடிப்படையில் தான் இங்கு அரசியல் செய்கிறார்கள். நான் முதலியார் இனத்தைச் சார்ந்தவன். என் இனம் சார்ந்த மக்களும் நான் வாக்குக் கேட்கும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும். இங்கு எந்த அரசியல் கட்சியும் சாதி பாராமல் அரசியல் செய்யவில்லை. எனவே தான் நானும் இனத்தை அடையாளப்படுத்துகிறேன்.நீட் தேர்வுக்கு விளக்கு கேட்போம் என அதிமுக கூறுகிறது ஆனால் எங்களிடம் அதிமுக வலியுறுத்தவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். இது நிச்சயமாக தவறான செயல். அதற்கான தண்டனையை அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள்” என்று கூறினார்.

ஒருவேளை அதிமுகவில் பதவி கொடுத்தால் நோட்டாவிற்கு வாக்கு கேட்காமல் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு பதவி வரும்போது சொல்கிறேன் என மழுப்பலாக பதிலளித்தார்.

சாதி அரசியல் முன்னெடுப்பு, பதவி கொடுத்தால் அதிமுகவிற்கு போக ஆலோசனை, என தனது நிலையில் குழப்பம் இருப்பதை செய்தியாளர்கள் மாறி மாறி கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் நடிகர் ஆனந்தராஜ் வேர்த்து விறுவிறுத்துப் போனார்.

நடிகர் ஆனந்த்ராஜ் தற்போது விஜய்யுடன் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading