விஜயின் அந்த செயல் என்னை நெகிழவைத்தது - ஆனந்த ராஜ்

நடிகர் ஆனந்தராஜ் பிகில் படபிடிப்பு தளத்தில் விஜயுடம் ஏற்பட்ட நெகிழ்சியான தருணங்களை பகிர்ந்துள்ளார்.

news18
Updated: August 2, 2019, 3:37 PM IST
விஜயின் அந்த செயல் என்னை நெகிழவைத்தது - ஆனந்த ராஜ்
நடிகர் ஆனந்தராஜ்
news18
Updated: August 2, 2019, 3:37 PM IST
விஜயுடன் பிகில் படத்தில் இணைந்து நடிக்கும் ஆனந்தராஜ் அவருடனான நெகிழ்ச்சி தருணம் குறித்து கூறியுள்ளார்.

90ஸ் கிட்ஸ் எல்லாம் பார்த்து பயந்த ஒரு வில்லன் தான் நடிகர் ஆனந்தராஜ். ஆனால் இவர் தற்போது தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்துமே காமெடி ஜார்னரில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜாக்பாட் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து நடிகர் ஆனாந்தராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


அதில், ஜாக்பாட் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, எனக்கு பிகில் பட சூட்டிங் இருந்தது. நானும், விஜயும் நடிக்க வேண்டிய காட்சி அன்று படமாக்கப்பட இருந்தது. ஆனால் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதை, விஜயிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

அதனை கேட்ட விஜய் உடனே தனக்காக அட்லீயிடம் பேசிவிட்டு, என்னை கிளம்ப சொன்னார். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டதால், நான் விழாவில் பங்கேற்க முடியாமல் போனது என்றும் ஆனந்தராஜ் தெரிவித்தார்.

அடுத்த நாள் மீண்டும் பிகில் படப்பிடிப்புக்காக சென்ற போது, விஜய் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது குறித்து அறிந்து மிகவும் வருத்தப்பட்டதாகவும் விஜயின் இந்த பண்பு தன்னை நெகிழவைத்தது என்றும் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Loading...

Also see...

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...