இனிமேல் இப்படி பண்ண வேண்டாம்...! பிகில் விமர்சகர்களை சாடிய ஆனந்தராஜ்

இனிமேல் இப்படி பண்ண வேண்டாம்...! பிகில் விமர்சகர்களை சாடிய ஆனந்தராஜ்
நடிகர் ஆனந்தராஜ்
  • News18
  • Last Updated: November 11, 2019, 1:00 PM IST
  • Share this:
பிகில் படத்தை விமர்சியுங்கள் ஆனால் தனிநபர் விமர்சனம் வேண்டாம் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.

ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களும் எழுந்தன.


இந்நிலையில் கடந்த 10-ம் தேதியன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் ஆனந்தராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பிகில் பட விமர்சனங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த நடிகர் ஆனந்தராஜ், “பிகில் என்கிற படத்தை இசைவெளியீட்டு விழாவில் திகில் என்று பேசினேன். இது ஒரு வியாபார ரீதியிலான படம். பிடித்தவர்கள் ஒரு விமர்சனம் கொடுக்கிறார்கள். பிடிக்காதவர்களிடம் ஒரு விமர்சனம் வருகிறது.

இன்றைய சூழ்நிலைக்கு அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படம். வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தனிமனித விமர்சனம் வேண்டாம்.விஜய் என்ற மந்திர சொல்லுக்காக இந்தப் படத்தை ஒருமுறை பார்த்தாக வேண்டும் என்று மக்கள் பார்க்கிறார்கள். விஜய்க்கு மட்டும் தான் அந்த சக்தி இருக்கு.

படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஹால்ஸ் வாங்கிக் கொடுக்கவில்லையா என்று விமர்சிக்கிறார்கள். ரூ.150 கோடியில் படம் எடுத்தவர்களை இப்படி விமர்சிப்பது தனி மனித விமர்சனம்.

என்னைப் பொறுத்தவரை பிகில் வெற்றிக்கு நடிகர் விஜய் மட்டும் தான் காரணம். ராயப்பன் கதாபாத்திரத்துக்காக அவர் மிகவும் சிரமப்பட்டார். நடிப்புத் தொழிலை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிநபர் விமர்சனம் தொடர்ந்தால் நானே வன்மையாக கண்டிப்பேன்” என்றார்.
First published: November 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading