அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
அமிதாப் பச்சன் - நடிகர்
  • News18
  • Last Updated: September 24, 2019, 8:13 PM IST
  • Share this:
திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அமிதாப்பச்சன். ஏற்கெனவே பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இரண்டு தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்து ஊக்கப்படுத்திய மாமனிதர் அமிதாப் பச்சன் ஒரு மனதாக தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒட்டு மொத்த நாடும் சர்வதேச சமூகமும் மகிழ்ச்சியடைந்துள்ளது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
Loading...திரைப்படத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கடந்த 1969-ம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், 2018-ம் ஆண்டுக்கான விருதுக்கு அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ பார்க்க: சென்னை வீதிகளில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன் - நடிகர் சூரி உருக்கம்

First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...