Home /News /entertainment /

அமிதாப் பச்சன் வீட்டில் மீண்டும் புகுந்த கொரோனா

அமிதாப் பச்சன் வீட்டில் மீண்டும் புகுந்த கொரோனா

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

2020-ஆம் ஆண்டு, அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

    அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ஜல்சாவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை நடத்தப்பட்ட 31 ஊழியர்களில் ஒருவருக்கு மட்டுமே கோவிட் பாசிட்டிவ் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

    2020-ஆம் ஆண்டு, அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

    இதையும் படிங்க - திமுக அமைச்சர் குடும்பத்துக்கு மருமகளாகும் வலிமை விநியோகஸ்தர் மகள்!

    இப்போது, அவரது இல்லமான ஜல்சாவில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவருக்கு கோவிட் பாசிட்டிவ் சோதனை செய்யப்பட்டுள்ளதாக முன்னணி ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமிதாப் பச்சன் வீட்டில் இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், 30 ஊழியர்களுக்கு நெகட்டிவ் என்றும், ஒருவருக்கு மட்டும் பாஸிட்டிவ் என்றும் முடிவு வெளியாகியிருக்கிறது.

    தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை அமிதாப் பச்சன் கடைசியாக இம்ரான் ஹாஷ்மி நடித்த செஹ்ரேயில் நடித்தார். தவிர ஜுண்ட், பிரம்மாஸ்திரா, கன்னடப் படமான பட்டர்ஃபிளை, மே டே, குட் பை, உஞ்சாய் மற்றும் நாக் அஷ்வின் இன்னும் பெயரிடப்படாத படம் என பல படங்கள் தற்போது அவர் கைவசம் உள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Amitabh Bachchan

    அடுத்த செய்தி