நடிகர் அஜித்துடன் நகைச்சுவை நடிகர் அம்பானி ஷங்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்றைய இணைய வைரல்.
சமீபத்தில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியானது. 'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து நடிகர் அஜித் தற்போது தன் அடுத்த படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றார். AK61 என் அழைக்கப்படும் இப்படத்திற்காக அஜித் தன் உடல் எடையை 25 கிலோ வரை குறைக்கவுள்ளார். சமீபத்தில் அவரின் புதிய தோற்றம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்ஸை குவித்தது.
அடேங்கப்பா... பென்ஸ் காரை பரிசளித்த ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி - யாருக்குன்னு பாருங்க!
இந்நிலையில் அஜித், நடிகர் அம்பானி ஷங்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக இருந்தவர் சங்கர். பிறகு படத்தில் வெட்டியானாக வரும் வடிவேலுவின் 2 அசிஸ்டெண்டுகளில் ஒருவராக இருப்பார். இன்னும் சொல்லப்போனால், 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில் சாம்ஸ் ஓட்டி வரும் பைக்கின் முன் ஒரு பையன் விழ, அதை வைத்து வடிவேலு பஞ்சாயத்து செய்வார். அவர் தான் இந்த ஷங்கர்.
தமிழ் சினிமாவில் மற்றொரு ஜோடி... பிரபல நடிகரை மணக்கும் நிக்கி கல்ராணி?
பின்னர் கருனாஸ் நடித்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் அவருடன் படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலிருந்து அவரது பெயர் அம்பானி சங்கரானது. சினிமாவில் வடிவேலு நடிக்காமல் இருந்தபோது, அவரது டீமில் உள்ள பலரும் வாய்ப்பில்லாமல் தவித்தனர். ஆனால் சங்கரோ `Thirsty crow' என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் தொடங்கி அதில் பல நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு வரவேற்புகளை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அஜித்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து ஆனந்த விகடன் இணைய ஊடகத்திற்கு பேட்டியளித்த சங்கர், “அஜித் சார் கூட 'ஜி' படத்துல நடிச்சிருந்தேன். அதன் பிறகு கிட்டத்தட்ட 18 வருஷத்துக்கு பிறகு அவரை சந்திக்கற வாய்ப்பு அமைஞ்சது. இந்தப் படம் சென்னையில ஒரு ஸ்டார் ஹோட்டல்ல தான் எடுத்தேன். சார் வீட்டு ஃபங்ஷன் அங்கே நடந்தது. நான் வேற ஒரு ஃபங்ஷனுக்காக அந்த ஹோட்டல் போயிருந்த போது தான், சாரை சந்திச்சேன். என்னை பார்த்ததும், 'எப்படி இருக்கீங்க சங்கர்?’ன்னு நலம் விசாரிச்சார். அதே அன்போட சார் பேசினார். சந்தோஷமான தருணமாகிடுச்சு. நாங்க எடுத்துக்கிட்ட படத்தைப் பார்த்த பலர் நான் அஜித் சார் கூட நடிக்கிறதா நெனச்சு வாழ்த்துகள் சொன்னாங்க. ஆனா நான் நடிக்கல” என்று தெரிவித்திருந்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.