முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH - துணிவு ஓடிடி ரிலீஸ் தேதி.. நச் வீடியோ மூலம் டாப் சீக்ரெட் சொன்ன நெட்பிளிக்ஸ்.!

WATCH - துணிவு ஓடிடி ரிலீஸ் தேதி.. நச் வீடியோ மூலம் டாப் சீக்ரெட் சொன்ன நெட்பிளிக்ஸ்.!

அஜித் குமார்

அஜித் குமார்

சாமானியர்கள் மீதான வங்கிகளின் அத்துமீறல்களை மையமாக கொண்டு உருவான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கள் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன், பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், சிபி சக்ரவத்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஜிப்ரான் இசையில் வெளியான 3 பாடல்களும் இப்படத்தில் ஹிட் அடித்தது. சாமானியர்கள் மீதான வங்கிகளின் அத்துமீறல்களை மையமாக கொண்டு உருவான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்சன் ஃபார்முலாவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 200 கோடிக்கும் மேலாக வசூலித்து முன்னேறி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘துணிவு’ திரைப்படம் வரும் 8-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்கில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது போலவே ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று படக்குழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நெட்பிளிக்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த அப்டேட்டை தெரிவித்துள்ளனர்.

Also read... 'கவர்ச்சியாக தெரிய இதையெல்லாம் செய்ய சொன்னார்' - இயக்குநர் குறித்து சமீரா ரெட்டி புகார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Netflix, Thunivu