ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: 15 மில்லியன் பார்வைகளை கடந்த அஜித்தின் ’சில்லா சில்லா’ பாடல்!

WATCH: 15 மில்லியன் பார்வைகளை கடந்த அஜித்தின் ’சில்லா சில்லா’ பாடல்!

சில்லா சில்லா

சில்லா சில்லா

Chilla Chilla - Thunivu Lyric Song (Tamil) | துணிவு திரைப்படத்தின் சில்லா சில்லா பாடல் தற்போது வரை 15 மில்லியன் பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.  இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜிப்ரான் இசையில் வைசாக் எழுதிய சில்லா சில்லா என்ற பாடலை கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு யூடியூப் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அனிருத் குரலில் உருவான அந்த பாடல் முதல் 24 மணி நேரங்களில் 1 கோடி பார்வையை கடந்து சாதனை படைத்தது.  இதைத்தொடர்ந்து தற்போது வரை சில்லா சில்லா பாடல் ஒன்றை கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான படங்களில், குறைந்த நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற பாடல் என்ற பெருமையை சில்லா சில்லா பெற்றுள்ளது.  இந்த பாடல் அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.  இந்த பாடல் தவிர, துணிவு படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் உள்ளன.  அந்த பாடல்களையும் விரைவில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

' isDesktop="true" id="854635" youtubeid="I7dRB7mTtLE" category="cinema">

நன்றி: Zee Music South.

First published:

Tags: Lyrical Video Songs