ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷூட் முடிஞ்சது.. மீண்டும் பைக் ட்ரிப்! புத்தர் முன் அஜித்.. வைரலாகும் போட்டோ!

ஷூட் முடிஞ்சது.. மீண்டும் பைக் ட்ரிப்! புத்தர் முன் அஜித்.. வைரலாகும் போட்டோ!

அஜித்

அஜித்

Ajithkumar: தாய்லாந்தில் மீண்டும் தன் பைக் ட்ரிப்பை தொடங்கியுள்ளார் அஜித்குமார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் எடுத்து வருகிறது. முன்னதாக, இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.

  Also Read: அசத்தல்  போட்டோக்களால் கிறங்கடிக்கும் பர்த்டே கேர்ள் பூஜா ஹெக்டே!

  அதன் பின் சென்னை திரும்பி அவர், மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார்.  அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில்தான் தற்போது ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

  ajith fans celebrates thunivu title and firstlook announcement, thunivu no guts no glory, துணிவு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டை கொண்டாடிய அஜித் ரசிகர்கள், Ajith ak61 titled as thunivu no guts no glory - Officially announced , Ajith AK61 titled as Thunivu, Thunivu, Thunivu first look poster, துணிவு, துணிவு ஃபர்ஸ்ட்லுக், Ajith ak61 title and first look, AK61, AK61 title, AK61 first look, Boney Kapoor mass update on Ajith AK61 with Stunning image, ak61 movie, ak61 movie update, ajith next movie, Thala Ajith daughter, thala ajith, thala ajith valimai, valimai hd stills, thala ajith movies, valimai images, valimai ajith, அஜித், அஜித் படங்கள், ajith latest images, ajith young look

  இந்நிலையில் தாய்லாந்தில் மீண்டும் தன் பைக் ட்ரிப்பை தொடங்கியுள்ளார் அஜித்குமார். அதுதொடர்பாக லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், ''புயலுக்கு பின் அமைதி'' என பதிவிட்டுள்ளார். அஜித்தை விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அது தொடர்பான அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

  முன்னதாக பைக் ரேஸ் மீது அதீத காதல் கொண்டர் அஜித், அவ்வப்போது பயணம் செல்வது வழக்கம். அந்த வகையில் அவர் வாங்கிய BMW பைக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருந்து விழுப்புரம், ஆத்தூர், சேலம், தர்மபுரி வழியாக பெங்களூர் சென்றார். அப்போது அவரின் பைக் பயணம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அத்துடன் விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார்.

  இந்த நிலையில் 2021-ம் ஆண்டு உலகம் முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொள்வது என திட்டமிட்டார். அந்த வகையில் தமிழகத்தில் ஆரம்பித்து பல மாநிலங்களில் பயணம் செய்தார். அதன்பின் தன்னுடைய 61-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதன் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் சண்டிகரில் இருந்து தன்னுடைய பைக் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். அவருடன் இந்தியாவின் சில முக்கிய பைக் ரைடர்களும் சென்றனர். நடிகை மஞ்சு வாரியரும் சென்றார். அவர்கள் சண்டிகரில் இருந்து குலுமணாலி, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய இடங்கள் வழியாக பயணித்து கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய ஸ்தலங்களில் தரிசனம் செய்து பயணத்தை முடித்தார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actor Ajith, Ajith