Home /News /entertainment /

Ajith 61: படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள விசாகப்பட்டினம் சென்றார் அஜித்!

Ajith 61: படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள விசாகப்பட்டினம் சென்றார் அஜித்!

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் புதிய திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
நடிகர் அஜித் தன்னுடைய 61வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் சென்றார். 

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் புதிய திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற முடிந்த நிலையில், தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார் அஜித்.

ஆனால் அந்த சமயத்தில் அவர் இல்லாத காட்சிகளை சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இயக்குநர் எச்.வினோத் படமாக்கி வந்தார்.



இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பில் அஜித் குமார் எப்போது கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அத்துடன் பட குழுவினரும் இறுதி கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வந்தனர்.

Also read... கலர்ஃபுல் பிகினியில் நடிகை சாரா அலி கான்... இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

அதற்காக தமிழகத்தில் சில இடங்களை தேர்வு செய்தனர். ஆனால் இறுதியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை நடத்த இயக்குநர் வினோத் திட்டமிட்டார். அதன்படி பட குழுவினர் சமீபத்தில் விசாகப்பட்டினம் சென்றனர்.

மேலும் நடிகர் அஜித்குமார் இன்று சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்றுள்ளார். அங்கு தன்னுடைய 61வது படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.  ஏற்கனவே படத்தின் 70 சதவீத காட்சிகளை படமாக்கி முடித்து விட்டனர். மீதமிருக்கும் 30 சதவீத காட்சிகளை விரைவில் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Entertainment

அடுத்த செய்தி