நடிகர் அஜித் குமார் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விஸ்வாசம் படத்திலிருந்து கண்ணான கண்ணே பாடல் வீடியோ தற்போது யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் 2019ம் வருடத்தின் முதல் ஹிட் படம் என்ற பெருமையை பெற்றது.
இந்தப் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா உடன் பேபி அனிகா, தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, விவேக், கோவை சரளா, உட்பட ஒரு பட்டாளமே நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையத்தார் டி.இமான். படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
2019-ம் ஆண்டு நடிகர் அஜீத்தின் `விஸ்வாசம்` திரைப்படம் இந்திய அளவில் ஒரு புதிய சாதனையை படைத்தது. ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் இந்திய அளவில் அதிகம் டிரண்ட் ஆன #HASHTAG பட்டியலில் #Viswasam ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்ததாக ட்விட்டர் நிறுவனம் கூறியது. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தல், 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகிய #HASHTAG-குகளை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் #HASHTAG முதலிடம் பிடித்துள்ளதது என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது.
Also read... யூ டியூப்பை தெறிக்கவிடும் விஜய்! 19 மில்லியன் வியூசை தாண்டிய வாரிசு ட்ரைலர்!
இந்நிலையில் படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தப் படத்தில் இடப்பெறும் அப்பா - மகள் பாடலான கண்ணான கண்ணே பாடல் தற்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. டி.இமான் இசையமைத்த இந்த பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார். மேலும் பாட்கர் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: MRT Music.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Ajith Songs