ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தின் ஏ.கே. 62 படத்துடைய அப்டேட்… ஷூட்டிங் ஆரம்பிக்கும் நாள் குறித்த புதிய தகவல்

அஜித்தின் ஏ.கே. 62 படத்துடைய அப்டேட்… ஷூட்டிங் ஆரம்பிக்கும் நாள் குறித்த புதிய தகவல்

அஜித் - விக்னேஷ் சிவன்

அஜித் - விக்னேஷ் சிவன்

இதுவரை மாஸ் படங்களை விக்னேஷ் சிவன் இயக்காத நிலையில் அஜித் உடனான அவரது படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அஜித்தின் ஏகே 62 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

  துணிவு படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏகே 62 படத்தில் இடம்பெறவுள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன.

  முதன் முறையாக விக்னேஷ் சிவனுடன் அஜித் தனது 62ஆவது படத்தில் இணையவுள்ளார். விக்னேஷ் சிவன் முன்னதாக காத்துவாக்குல ரெண்டு காதல், நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அஜித்தின் சில படங்களுக்கு விக்னேஷ் சிவன் பாடல்களையும் எழுதியுள்ளார்.

  WATCH: இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலகத் தலைவன் பட டீசர்!

  இதுவரை மாஸ் படங்களை விக்னேஷ் சிவன் இயக்காத நிலையில் அஜித் உடனான அவரது படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது துணிவு படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றும், அஜித்தும் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

  இந்த நிலையில் ஏகே 62 படத்தின் ஷூட்டிங் இந்த மாதமே தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. விறுவிறுவென படத்தை முடித்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  தற்போது ஏகே 62 படத்துடைய ப்ரீ புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. முன்னதாக, துணிவு படத்தை முடித்துக் கொண்டு, சில மாதங்கள் அஜித் பிரேக் எடுத்துக் கொள்வார் என்று தகவல்கள் வெளிவந்தன.

  WATCH – கற்பனைக்கு எட்டாத பிரமாண்டம்… அவதார் 2 படத்தின் ட்ரெய்லர்

  8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலையொட்டி நேருக்கு நேராக மோதுகின்றன. இதனால் வரவிருக்கும் பொங்கல் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith