சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்டோர் நயன்தாராவின் திருமணத்தில் பங்கேற்ற நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் இந்த நிகழ்வை தவிர்த்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ரிசார்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்கு ரஜினி, கமல், அஜித், விஜய், முதல்வர் ஸ்டாலின், ஷாரூக்கான் உள்பட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விழாவில் பங்கேற்பதற்காக ஷாரூக்கான் இன்று காலையிலேயே சென்னைக்கு வந்து திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க - நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விழாவின் முக்கிய நிகழ்வுகள்!
இந்த நிலையில் அஜித் திருமண விழாவில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர். ஆனால், அஜித் குடும்பத்தினர் ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் ஷாலினி சகோதரி ஷாமிளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய் சேதுபதி, வசந்த் ரவி, பொன்வண்ணன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், அட்லீ, நெல்சன் தயாரிப்பாளர்கள் லலித் குமார், போனி கபூர், டிரைடன் ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமண விழாவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விழாவை சிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்கள், முதியவர்கள் கோவில்கள் என மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.