நடிகர் அஜித் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடைசியாக நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' திரைப்படம் வெளியானது. அதிக பைக் ரேஸ் காட்சிகளைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.
இதையடுத்து அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே61' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியது. தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை நிராகரித்த மாஸ் ஹீரோ?
’ஏகே61’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். வினோத் இந்தப் படத்தில் ஒரு புதிய காம்போவை விரும்பியதாகவும், அதற்கு மஞ்சு வாரியர் பொருத்தமாக இருப்பார் எனவும் உணர்ந்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக, ஒரு திடமான நடிப்புத் தேவை, எனவே படக்குழு மஞ்சுவை அணுகியதாகவும், பின்னர் ஒப்பந்தத்தில் மஞ்சு கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் அஜித், நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வைத்து அவரை சந்தித்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. அவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் ரசிகர்கள் வடிவமைத்த படம் தான் அது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.