ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தின் துணிவு பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனத்தால் ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தின் துணிவு பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனத்தால் ரசிகர்கள் உற்சாகம்

துணிவு படத்தில் அஜித்

துணிவு படத்தில் அஜித்

8 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே நாளில் பொங்கலையொட்டி அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் வெளிவருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் குறித்த முதல் விமர்சனம் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தயாராகியுள்ளனர்.  வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.

    துணிவு படம் குறித்து இசையமைப்பாளர் கொடுத்த அப்டேட்... கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

    முதன் முறையாக இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித்துடன் துணிவு படத்தில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே எச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    1987 - இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் துணிவு படத்தின் ட்ரெய்லர் குறித்த முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

    தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் கலக்கபோகும் யோகிபாபு

    சென்சார் போர்டில் பணியாற்றி வரும் உமைர் சாந்து என்பவர் பல்வேறு புதிய படங்கள் குறித்த அப்டேட்டை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தற்போது துணிவு படத்தின் ட்ரெய்லரை பார்த்திருப்பதாகும், இந்த ட்ரெய்லர் தீயாக இருப்பதாக கூறி ஃபையர் எமோஜியை பதிவிட்டுள்ளார். அவரது பதிவு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    8 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே நாளில் பொங்கலையொட்டி அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் வெளிவருகின்றன. இதனால் ஓப்பனிங் டே தமிழ் சினிமா எதிர்பார்த்திராத அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith, Kollywood