கார், பைக் ரைடுகளைத் தொடர்ந்து அஜித் தற்போது சைக்கிள் ரைடில் கவனம் செலுத்தி வருகிறார். அதிகாலை நேரத்தில் தலையில் ஹெட்லைட்டுடன் கூடிய அஜித்தின் புகைப்படம் தாறுமாறாக பரவி வருகிறது.
ஏற்கனவே கார் மற்றும் பைக் ரேஸில் கலக்கும் அஜித், அடுத்து சைக்கிள் ரேஸில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வலிமை படத்தின் ரிலீசை எதிர்நோக்கியுள்ள அஜித், தற்போது அடுத்த படத்தை ஆரம்பிப்பதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இந்தப் படத்தையும் எச். வினோத் இயக்க, அனிருத் படத்திற்கு இசையமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலிமை படத்தைப் போலவே, அடுத்த படத்தின் டைட்டிலும் படத்தின் பூஜையின்போதே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜிம் இடம்பெறும் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.
இதற்கிடையே, தனது அடுத்த படத்திற்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருகிறார். இதனால் அடுத்த படத்தில் அஜித் எப்படி இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித் சைக்ளிங் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read :
Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?
அதிகாலை நேரத்தில், தலையில் ஹெட்லைட்டுடன் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அஜித் நிற்கும் காட்சி, ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
ஏற்கனவே அஜித் கார் மற்றும் பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வம் காட்டிய அஜித், அதில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பெற்றிருந்தார்.
விமானத் துறையிலும் ஈடுபாடு கொண்ட அஜித், ஐஐடி மாணவர்களுக்கே சமீபத்தில் பாடம் எடுத்தார்.
Also Read :
கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!
வலிமை படத்தை முடித்துக் கொண்டு அஜித் ஆல் இண்டியா சுற்றுலாவை பைக்கில் மேற்கொண்டார். இதற்காக உலகம் சுற்றி அனுபவம் கொண்ட மரால் யசார்லுவிடம் ஆலோசனை பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின.
ஒவ்வொரு விளையாட்டாக தொட்டு, அதில் முத்திரை பதித்து வரும் அஜித் குமார், அடுத்த என்ன ஸ்போர்ட்ஸை கையில் எடுப்பார் என்று ரசிகர்கள் ஆளாளுக்கு கமென்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.