பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3வது முறையாக கைகோர்த்திருக்கும் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. தமிழகத்தில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
அதே நாளில் விஜய்யின் வாரிசு படமும் வெளியாவதால் வாரிசா ? துணிவா ? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அடித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே கொளுந்துவிட்டு எரியும் விவாதங்களை மேலும் சூடேற்றும் விதமாக சமீபத்தில் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜுவின் சமீபத்தி பேட்டியில் பேசியிருக்கிறார்.
அவர் பேசியிருப்பதாவது, தமிழகத்தில் 800 திரையரங்குகள் இருக்கின்றன. இதில் இரண்டு படங்களும் சம அளவில் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஜய் நம்பர் 1 ஸ்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு அடுத்து இடத்தில் தான் அஜித் இருக்கிறார். அப்படி இருக்கையில் இரண்டு படங்களுக்கும் எப்படி சம எண்ணிக்கையில் திரையரங்குகளை ஒதுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிக்க | பதான் காவி பிகினி சர்ச்சைக்கு பின் மௌனம் கலைத்த நடிகர் ஷாருக்கான்.. 'குறுகிய பார்வை' என உருக்கம்
தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்திருக்கிறார். பேச்சுவார்த்தைக்கு பிறகு என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
#AK has completed Leg 1 of his world tour by riding through all the states in India. Quite an achievement considering the love he gets wherever he travels in India! Proud moment for all adventure riders.
— Suresh Chandra (@SureshChandraa) December 16, 2022
இதற்கிடையே நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தகவல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அவரது பதிவில், நடிகர் அஜித் உலக பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் தனது பைக்கில் பயணம் செய்திருக்கிறார். இந்தியாவில் செல்லும் இடமெல்லாம் மக்களின் அன்பைப் பெற்றார். இது எல்லா பைக் ரைடர்களுக்கும் பெருமையான தருணம் என குறிப்பிட்டு நடிகர் அஜித்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay, Bike