மேலாளரின் குடும்ப திருமணம்.... வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்ற அஜித்...!

மேலாளரின் குடும்ப திருமணம்.... வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்ற அஜித்...!
  • News18
  • Last Updated: February 21, 2020, 4:42 PM IST
  • Share this:
தனது மேலாளரின் குடும்ப திருமணத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார், மண்டப வாசலில் நின்று திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்று நெகிழ வைத்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வேகமாக தயாராகிவருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்குமாருக்கு சண்டைக் காட்சியில், கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மருத்துவ முதலுதவி மட்டும் செய்து கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்தார். எனினும் அஜித்திற்கு காயம் ஏற்பட்ட செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியது.


வலிமை படத்தில் அஜித்தின் கெட்டப் எப்படி இருக்கும் என்றும் அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர்.

இந்த நிலையில், ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்து வைக்கும் வகையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துகொண்டுள்ளார்.

Picture of Thala Ajith
சென்னை லீலா பேலஸில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணம் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் அஜித் கலந்துகொண்டுள்ளார்.

திருமணத்திற்கு வந்தவர்களை வாசலிலேயே நின்று வரவேற்று, இது தன்னுடைய குடும்ப திருமணமே என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் தல.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

குறிப்பாக வலிமை படத்தில் அஜித்தின் கெட்டப் என்ன என்று ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு, விருந்தளிக்கும் வகையில் தற்போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருக்கின்றன.

Also See..
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்