Home /News /entertainment /

Ajith: திருச்சி ரைஃபிள் கிளப்பில் அஜித்... வைரலாகும் வீடியோ!

Ajith: திருச்சி ரைஃபிள் கிளப்பில் அஜித்... வைரலாகும் வீடியோ!

அஜித்

அஜித்

வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஏகே61 படத்தை முன்னதாக 2022 தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர்.

    திருச்சி ரைஃபிள் கிளப்பில் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    நடிகர் அஜித் நடிப்பை தவிர தனது மற்ற செயல்பாடுகளுக்கும் பெயர் பெற்றவர். பைக் ரேஸ் தவிர அவரது இதயத்திற்கு நெருக்கமான மற்றொரு விஷயம் துப்பாக்கி சுடுதல். இதில் பல பரிசுகளையும் அஜித் வென்றுள்ளார். இதற்கிடையே திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்ற அவரை, ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்ற அஜித், இந்த ஆண்டுக்கான போட்டிக்கு தயாராகி வருவது போல் தெரிகிறது. மேலும் அவர் வரவிருக்கும் துப்பாக்கி சுடுதல் கலந்துக் கொண்டு பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    'அஜித் 61' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், இயக்குனர் ஹெச்.வினோத் சென்னையில் படத்திற்கான சில சிறிய பகுதிகளை படமாக்கி வருகிறார். அஜித், மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் உள்ளிட்ட நட்சத்திரங்கள், 'ஏகே 61' படத்தில் நடிக்கிறார்கள். இதற்கிடையில், ஒரு மாத விடுமுறையை இங்கிலாந்தில் கழித்த அஜித், சமீபத்தில் சென்னை திரும்பினார்.

    கமல், விக்ரம், அமீர் கான் வெளியிட்ட அருள்நிதியின் டைரி ட்ரைலர்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஏகே61 படத்தை முன்னதாக 2022 தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் இப்படம் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக அஜித் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். அதே நேரத்தில் ஜிப்ரான் முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் அஜித்திற்கு இசையமைக்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி