Valimai First Look : 5 நிமிடத்தில் அசரவைத்த அஜித் ரசிகர்களின் செயல்!

வலிமை

அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் இன்று வலிமை அப்டேட் வெளியான நிலையில் 5 நிடத்திலேயே அஜித் ரசிகர்களின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது.

  • Share this:
    தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர். நடிகர் அஜித் குறித்த சிறிய தகவல் என்றாலும் அதனை உலகளவில் டிரெண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவெளியில் அவர் இருக்கும் புகைப்படம், ரசிகர்களுடன் அவர் எடுத்து கொண்ட  புகைப்படம்என்று ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும் ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு விருந்தாக இருக்கும்.

    அப்படிப்பட்ட அஜித் ரசிகர்கள் பல நாட்களாக வலிமை படத்தின் அப்டேட் கிடைப்பதற்காக ஒருவரையும் விட்டு வைக்காமல் இருந்தனர். கிரிக்கெட் மைதானம் தொடங்கி யூரோ கோப்பை கால்பந்து வரை அஜித் ரசிகர்களின் அட்டகாசம் ஓயாமல் இல்லை. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று குறிச்சொல்லும் பூசாரியிடம் வலிமை அப்டேட் கேட்டு சாமியையும் விட்டுவைக்காமல் இருந்தனர். அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் இன்று வலிமை அப்டேட் வெளியான நிலையில் 5 நிடத்திலேயே அஜித் ரசிகர்களின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது.

    வலிமை ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணி அளவில் வெளியான நிலையில் அஜித்தின் ஃபார்ஸ்ட் லுக் போட்டோவை மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள் 5 நிமிடத்தில் பேனர் அடித்து, பட்டாசுகள் வெடித்து உற்ச்சாகமாக கொண்டாடினர். மேலும், இருசக்கர வாகனத்தில் வலிமை பட போஸ்டரை அவரது ரசிகர்கள் பிடித்துகொண்டு ஊர்வலமாக செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.



    இன்று மாலை மோஷன் போஸ்டர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே, படத்தின் தலைப்பு மற்றும் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகி, வைரலாக பரவி வருகிறது, இது உலகளவில் "வலிமை" படத்தின் மீதான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டும்படி அமைந்துள்ளது.

    "வலிமை" படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் "வலிமை" திரைப்படம் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வலிமை படத்தின் ஃபர்ஸட் லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் உற்சகமாக கொண்டாடி வருகினறனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: