ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘துணிவு’ படத்தின் சூப்பர் அப்டேட்… வைரலாகும் அஜித்தின் புதிய ஃபோட்டோ…

‘துணிவு’ படத்தின் சூப்பர் அப்டேட்… வைரலாகும் அஜித்தின் புதிய ஃபோட்டோ…

துணிவு பட டப்பிங்கில் அஜித்

துணிவு பட டப்பிங்கில் அஜித்

ஜிப்ரான் இசையில் துணிவு படத்தின் முதல் பாடலை அனிருத் பாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துணிவு படத்தின் டப்பிங்கை படத்தின் ஹீரோ அஜித் முடித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

  வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார். இதுவரையில்லாத தோற்றத்தில் அஜித் இடம்பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

  நெகடிவ் கேரக்டரில் அஜித் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையிலேயே நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு துணிவு படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  அட்லீ இயக்கும் ஜவான் பட கதை விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையா? - தயாரிப்பாளர் சங்கத்திற்கு பறந்த புகார்!

  எச்.வினோத்தின் ஒவ்வொரு படத்திலும், உண்மையிலேயே நடந்த சம்பவங்களின் டச் இருக்கும். அந்த வகையில் அவரது முந்தைய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை படங்கள் வரவேற்பை பெற்றன. தற்போது துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில், படம் நன்றாக வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  படத்தில் இடம்பெற்ற மஞ்சு வாரியர், ஆமிர், மமதி சாரி உள்ளிட்டோர் டப்பிங்கை முடித்துள்ள நிலையில், அஜித்தும்  டப்பிங்கை முடித்திருக்கிறார். இதுதொடர்பான ஃபோட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

  முன்னால் டப்பிங் பேசியவர்கள் அமர்ந்த நிலையில் ஃபோட்டோக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் அஜித் போடியத்தில் மைக்கை வைத்தவாறு, நின்று கொண்டே டப்பிங்கை பேசியுள்ளார். அஜித்தின் மலர்ச்சியான முகமே படத்தின் ரிசல்ட்டை சொல்வதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.

  அடுத்த கட்டமாக படத்தின் புரொமோஷனை துணிவு படக்குழு தொடங்கவுள்ளது. இதில் அஜித் பங்கேற்பாரா அப்படி அவர் ஓகே சொன்னால் சென்னை நேரூ ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல்கள் பரவின.

  Kajal Aggarwal: கண்ணை கவரும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் படங்கள்!

  ஆனால் அஜித்தோ, ‘நல்ல படத்திற்கு அதுவே விளம்பரம்’ என்று கூறி தான் புரொமோஷனில் பங்கேற்காததை உறுதி செய்தார். அடுத்த வாரம் துணிவு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஜிப்ரான் இசையில் துணிவு படத்தின் முதல் பாடலை அனிருத் பாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith