ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொறாமையோ வெறுப்போ வேண்டாம்... ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

பொறாமையோ வெறுப்போ வேண்டாம்... ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

அஜித்

அஜித்

வெறுப்புணர்வோ, பொறாமையோ வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, உயர்ந்த இலக்குடன் செயல்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வாழு வாழ விடு... அளவற்ற அன்புடன் அஜித் என நடிகர் அஜித் ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய உதயநிதி... முடிவை மாற்றிய கமல் ஹாசன்!

    இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில், “வெறுப்புணர்வோ, பொறாமையோ வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, உயர்ந்த இலக்குடன் செயல்பட வேண்டும்" என அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith